விருத்தாசலத்தில் விமரிசையாக நடைபெற்ற செடல் திருவிழா

விருத்தாசலத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் செடல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்திலுள்ள செல்லியம்மன் கோயில் திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து, செடல் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக மணிமுத்தாறில் சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.  பக்தர்கள் 60 அடி அலகு குத்தியும், பறவை காவடி எடுத்து வந்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version