துறையூர் அருகே திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி: கோயில் நிர்வாகி கைது

துறையூர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில், கோயில் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் கருப்பசாமி கோவிலில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு பிடி காசு திருவிழா நடந்தது. இந்த நிகழ்வின் போது, பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல முயன்றதால் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில், கருப்பசாமி கோவிலின் நிர்வாகி தனபால் என்பவரை துறையூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Exit mobile version