தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும் என்றும், உள் தமிழகத்தின் சில பகுதிகளில் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, திருத்தணியில் நேற்று வெப்பம் சுட்டெரித்தது. 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானதால், மக்கள் அவதிக்கு ஆளாகினர்.