தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் – டிசம்பர் 7 தொடங்கும் தேர்தலில் ஆளும் பாஜக தனித்து போட்டி

தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தெலுங்கான மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தனது பதவியை கடந்த செப்டம்பர் 6-ம் தேதி ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து 4 மாநிலத் தேர்தல்களுடன் 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானாவில் ஒரே கட்டமான தேர்தல் நடைபெறுகிறது.

இது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஏற்கனவே, 107 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள சந்திரசேகர ராவின் தெலுங்கானா இராட்டிர சமிதி, பாஜக ஆகிய கட்சிகள் தனித்து களம் காண்கின்றன.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. இதேபோல், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version