ஏஐசிடிஇ-ன் (AICTE) அங்கீகார நீட்டிப்பு பெறாத எந்தவொரு பாலிடெக்னிக் கல்லூரியும் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பாலிடெக்னிக் கல்லூரிகளும் ஏஐசிடிஇ-ன் அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 2019-20ம் ஆண்டிற்கான அங்கீகார நீட்டிப்பை அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளும் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் 2019-20ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் ஈடுபடக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதை மீறி நடந்துகொள்ளும் கல்லூரிகளின் அங்கீகாரம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும், குற்ற நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் இன்றி சேர்க்கப்படும் மாணவர்களும் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம், தமிழகத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.