எழுத கற்றுக்கொடுப்பவர்களுக்கு ஊதியம் இல்லை…எழுதாத பேனா சிலை அமைக்க காசு உண்டு!

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு கல்லூரிகள் மற்றும் அரசுப் பள்ளிகள் போல அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. அங்கு வேலைபார்க்கு பேராசியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இன்னும் ஊதியம் வழங்கப்படாமல் அலட்சியப் போக்குடன் இருக்கிறது தமிழக அரசு. மாதம் தொடங்கியது முதல் தேதி எப்போது சம்பளத்தை வழங்கும் அரசானது ஏழு நாட்கள் ஆகியும் இன்னும் எந்தவித சம்பளப் பணமும் வழங்காமல் இருக்கிறது. மேலும் சில உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் கடந்த ஜனவரி மாதமே இன்னும் சம்பளம் வழங்காமால் இழுத்து அடித்துள்ளது தமிழக அரசு. இந்த விடியாத திமுக ஆட்சியின் உயர்கல்வித் துறை அமைச்சரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. மாணவர்களை எழுத வைத்து அழகு பார்க்கும் ஆசிரியர்களை கண்டுகொள்ளாமல் எழுதாத பேனாவிற்கு சிலை அமைக்க சிந்தித்துக் கொண்டிருப்பது எந்தவகையில் நியாயம்.

Exit mobile version