மத்திய மீன்வளத்துறைக்கு புதிய செயலாளராக தருண் ஸ்ரீதர் நியமனம்

மத்திய அரசால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மீன்வளத்துறையின் முதல் செயலாளராக தருண் ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் மீனவர்களின் நலனைப் பாதுகாக்க மீன்வளத்துறை என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் மீன்வளத்துறை அமைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரியான தருண் ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மத்திய அரசின் பால்வளத்துறை, கால்நடை துறை செயலாளராக பணியாற்றி வரும் இவருக்கு கூடுதல் பொறுப்பாக மத்திய மீன்வளத்துறை ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version