இலங்கை ராணுவத்துடன் வடக்கிலுள்ள தமிழர்கள் நட்புறவுடன் உள்ளாதாக அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ள சிறிசேனா வசமிருக்கும் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மற்றும் மகாவலி போன்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிபர் சிறிசேனா, வடக்கிலுள்ள தமிழர்கள் ராணுவத்துடன் நட்புரவுடனும், அன்போடும் இருப்பதாக கூறினார்.
வடக்கில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களுடன் சேர்ந்து ராணுவத்தினர் முன்னேற்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சிறிசேனா தெரிவித்தார். வடக்கில் அநாவசியமாக உள்ள ராணுவ முகாம்களை அகற்றுமாறு, இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.