நவம்பர் 22ல் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்!

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நவம்பர் 22ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் 2020-22ம் ஆண்டுக்கானத் தேர்தலை டிசம்பர் இறுதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நவம்பர் 22ம் தேதி, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை, சென்னை அடையாறு, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என்று திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அதிகாரியான நீதியரசர் எம்.ஜெய்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் அக்டோபர் 16ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 23ம் தேதி அன்றே வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று, 29ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version