தமிழகத்தில் நகர்ப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் உள்ள 4,376 கிலோமீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள, 11,000 கிலோமீட்டர் சாலைகளும் மேம்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சாலை புனரமைப்புப் பணிகளுக்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று சாலை புனரமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.