கொடுக்கும் உரிமைத் தொகையிலும் பாரபட்சம் காட்டுகிறதா விடியா அரசு..? 2023 தமிழக பட்ஜெட்டில் திமுக ஏமாற்றியவைகள் (பகுதி 1)

இன்று (20.03.2023) தமிழக பட்ஜெட் தொடரானது சட்டசபையில் நடைபெற்றது. மேம்போக்கான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருந்துள்ளது என்பது சில பொருளாதார நிபுணர்களின் விமர்சனமாக இருந்தது. இந்த பட்ஜெட்டினையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் திமுகவின் இந்த பட்ஜெட் கானல் நீர்தான். அது மக்களின் தாகத்தினைத் தீர்க்காது என்று விமர்சனம் வைத்துள்ளார்.

திமுக  மக்கள் நலனுக்கான விடயங்களை செய்கிறேன் என்று பல வாக்குறுதிகளைக் கொடுத்து தற்போது பட்ஜெட்டில் ஏமாற்றி வருகிறது. இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக அனைவருக்கும் பரிட்சயப்படுவது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையினை வழங்குவது என்கிற திட்டமாகும். அதிலும் திமுக ஒரு ஏமாற்று வேலையைப் பார்த்துள்ளது. அதாவது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் கூறியுள்ளார். அப்படியென்றால் தேர்தல் வாக்குறுதியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியிருந்தது முற்றிலும் பொய் தான் என்பது இங்ஙனம் நிரூபணம் ஆகியுள்ளது. இதனைக் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்  தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் என்று எதன் அடிப்படையில் தேர்ந்தெடுப்பீர்கள் மற்றும் அவர்களை எப்படி தகுதி வாய்ந்தவர்கள் என்று நிரூபணம் செய்வீர்கள் என்று கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்தத் திட்டத்திற்கு மட்டுமே 7000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இது தமிழகத்தில் உள்ள 40 முதல் 50 லட்சம் குடும்பத் தலைவிகளை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்று பொருளாதார நிபுணர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Exit mobile version