தொழில் தொடங்குவதற்கான சிறந்த இடம் தமிழகம்தான் – அமைச்சர் எம்.சி.சம்பத்

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக தொழில் தொடங்குவதற்கான சிறந்த இடம் தமிழகம்தான் என தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் இரண்டாவது உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு என மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சுரேஷ் பிரபு ஆகியோரை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் டெல்லியில் இன்று நேரில் அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக கூறினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்பட அனைத்தும் சிறப்பாக உள்ளதால் முதலீடு செய்ய ஏற்ற இடமாக இருப்பதாகவும் அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version