தமிழக சட்டசபை ஜனவரி முதல் வாரம் ஆளுனர் உரையுடன் தொடங்குகிறது

தமிழக சட்டசபை ஜனவரி முதல் வாரம் கூட உள்ளது. 5 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி வரும் ஜனவரி மாதம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கும். ஆளுநர் உரைக்கு பின்னர் மறுநாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். முன்னதாக சட்டசபையில் ராமசாமி படையாச்சியாரின் உருவப்படம் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி இந்த கூட்டத்தொடரில் ராமசாமி படையாச்சியாரின் உருவப்படம் திறக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Exit mobile version