லண்டன் பல்கலைக்கழகத்தில் மீண்டும் தமிழ் இருக்கை

லண்டன் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது.

நிதிப்பற்றாக்குறை மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் பிரிவு முடக்கப்பட்டது. இதனிடையே இந்த ஆண்டு முதல் தமிழ் இருக்கை மீண்டும் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். தமிழ் இருக்கை அமைக்க 100 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், அதில் 25 சதவிகிதம் அரசாங்கத்திடம் இருந்து வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

Exit mobile version