உள்ளாட்சி தேர்தல் : இட ஒதுக்கீட்டு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட, மாற்றி அமைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீடு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இதன்படி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி அட்டவணை பிரிவு பெண்களுக்கும், தென்காசி, ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை, வேலூர், விழுப்புரம் , காஞ்சிபுரம், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை பொதுப் பிரிவினருக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதேபோல், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் வாலாஜாபாத் அட்டவணை பிரிவினருக்கும், காஞ்சிபுரம், உத்திரமேரூர் பொதுப்பிரிவு பெண்களுக்கும், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காட்டாங்குளத்தூர், பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகள் அட்டவணை பிரிவு பெண்களுக்கும், திருக்கழுக்குன்றம் அட்டவணை பிரிவினருக்கும், லத்தூர், மதுராந்தகம் ஆகியவை பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அச்சரப்பாக்கம், சித்தாமூர், திருப்போரூர் – ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 8 இடங்கள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி மயிலம், மேல்மலையனூர், வானூர், விக்கிரவாண்டி ஆகியவை பொதுப்பிரிவு பெண்களுக்கும், செஞ்சி, கண்டமங்கலம், மரக்காணம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி அட்டவணை பிரிவு பெண்களுக்கும், தியாகதுருகம், திருநாவலூர் அட்டவணை பிரிவுக்கும், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version