’அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்’ – உலக அதிசயமான ‘தாஜ்மஹாலை’ இலவசமாக பார்வையிட அனுமதி!

உலக அதிசயங்கள் ஏழு உண்டு. அவற்றில் இந்தியாவினைச் சேர்ந்த தாஜ்மஹால் குறிப்பிடத்தக்க அதிசயமாகும். இதனை கட்டமைத்தவர் ஷாஜகான். இவர் ஜஹாங்கீரின் மூன்றாவது புதல்வர். குர்ரம் என்ற இயற்பெயரை முதலில் கொண்டிருந்த ஷாஜகான் பட்டம் சூட்டிய பிறகு ஷாஜகான் எனும் பெயரை சூட்டிக்கொண்டார். அவருக்கு பல மனைவிகள் இருந்தும் அவர் மிகவும் நேசித்தவர் மும்தாஜ். மும்தாஜ் இயற்கை எய்தியதும் அவரின் மீது கொண்ட அன்பினால் தாஜ்மஹாலை கட்டியெழுப்பினார். ஷாஜகானின் 368வது நினைவு தினமானது அனுசரிக்கப்பட இருக்கிறது. அதற்காக பிப்ரவரி 17 முதல் 19 ஆகிய தினங்களில் வருடம்தோறும் தாஜ்மஹாலில் ஏதெனும் சிறப்பு ஏற்பாடுகள் இருக்கும்.

தற்போது சிறப்பு ஏற்பாடாக வெளிநாட்டு பயணிகளுக்கும் இந்திய பயணிகளுக்கும் தாஜ்மஹாலைப் பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டு பயணிகளுக்கு 1,100 ரூபாயும் இந்திய பயணிகளுக்கு 50 ரூபாயும் வசூலிக்கப்படும். தற்போது இவரது நினைவுதினத்தை முன்னிட்டு பார்வையாளர்கள் மூன்று நாட்களுக்கு இலவசமாக பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version