தைவானின் தைபே நகரிலிருந்து நேற்று அதிகாலையில் தாய்டூங் நகருக்கு 350 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில், ஹுவாலெய்ன் பகுதியில் உள்ள சுரங்கப் பாதையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.
எப்படி நடந்தது:
சுரங்கப் பாதை யில் பராமரிப்புப் பணிக்காக, மேடான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி ஒன்று, அங்கிருந்து இறங்கி தண்டவாளம் அருகே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ரயில், அந்த லாரியின் மீது மோதி தடம்புரண்டதாக போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கவனக்குறைவாக லாரியை நிறுத்திய ஓட்டுநர், சுரங்கப் பாதை பராமரிப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.