2020ஆம் ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் மேலும் 10 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு தமிழக சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கிய தமிழக அரசிற்கு ஆசிரம நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட அப்பகுதி மக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் ஒருநாள் வேலை நிறுத்தம் தமிழகத்தில் முற்றிலும் தோல்வி அடைந்தது. போக்குவரத்து மற்றும் அரசு அலுவலகங்கள், வங்கிப் பணிகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பு மிகுந்த மாநிலமாக உள்ளதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டிற்கென தமிழகத்தில் உள்ள 256 இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தேசிய அளவில் சிறந்து விளங்கிய மாநிலங்களுக்கான கிரிஷி கர்மான் விருது தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக இருப்பதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.