தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது என அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை பூந்தமல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 12 பேர் இறந்ததாக வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அரசின் அறிவுரைகளை முறையாக பின்பற்றினால், எந்த வைரஸூம் தொற்றாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநிலங்களுக்கு லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உப்பு தேக்கம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதை மீறி, வெளியே சென்றால் சிறை தண்டனை விதிக்கப்படும் என, மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று சமூகநலன் மற்றும் மாற்றுதிறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கண்டறியும் 5வது ஆய்வகத்தை சேலத்தில் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் பரவுதலை தடுக்கும் விதத்தில், இன்று நள்ளிரவு முதல் தமிழகத்திற்கு வரும் வெளிமாநில வாகனங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளைய தினம், சுய ஊரடங்கிற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.