வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் வழக்கு
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி.சண்முகம் வழக்கு தொடுத்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி.சண்முகம் வழக்கு தொடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் அதிகாரி வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
12 மாநிலங்களில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவினை நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க சேலத்தில், போலீசார் மற்றும் துணை இராணுவ படையினர் 200-க்கும் மேற்பட்டோர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி அனைத்து சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திரிபுரா கிழக்கு மக்களவைக்கான தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 11-ம் தேதி திரிபுரா மேற்கு மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றபோது பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.