அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று முதல் நடைபெறுகிறது
அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடக்கிறது.
அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடக்கிறது.
அதிமுக மாணவர் அணியின் சார்பில் நடைபெறும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
அதிமுக அம்மா பேரவையின் சார்பில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தமிழக மக்களுக்கு அதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் வாக்களித்து வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சேலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது, வாக்களிப்பதற்காக வந்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
திமுகவின் பொய்களை புரிந்து கொண்டதால் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவளித்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டுத் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துச் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
குடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரித்தது கொள்கை முடிவின் அடிப்படையிலானது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.