அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி

 

1944 ஆம் ஆண்டு ஆகஸ்டு 20ஆம் தேதி ராஜிவ் காந்தி பிறந்தார். விமான ஓட்டியாக தனது பணியை தொடங்கி, பின்னாளில் அரசியலுக்குள் நுழைந்தார். நாட்டின் 6வது பிரதமராக பதவியேற்ற ராஜிவ் காந்தி, இந்தியாவின் வலிமை கிராமத்தில் தான் உள்ளது என்று கூறி பஞ்சாயத்து முறைகளில் பல மாற்றங்கள் செய்து, அதற்கு முக்கிய இடம் கொடுத்தார். இவரது ஆட்சி காலத்தில் தான் அறிவியல் மற்றும் தொழில்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கல்வித்துறையில் ஒரு புதிய பரிணாமத்தை கொண்டு வந்தார். இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தை கொண்டு வந்து, அனைவருக்கும் கல்வியை கிடைக்கச் செய்தார். ஐடி மற்றும் தொலை தொடர்பு துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தினார். இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்றுத் தர முயன்றார். இந்திய அரசியலில் பல திரும்பத்தை ஏற்படுத்திய, ராஜிவ் காந்தி, 1991 மே 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அவரது பிறந்த நாளான இன்று சமய நல்லிணக்க நாளாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவித்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

 

 

Exit mobile version