வெயில் ஒன்றும் கொடியதல்ல…..

குளிர் போய் வெயில் வந்தது,சூடான டீ போய் இப்போ கூளான ஜூஸ் வந்தது.பொதுவாக சம்மர் என்றாலே அனைவரும் பயப்பிடுகின்றனர்.அய்யோ, சம்மர் வந்துவிட்டது.இனி சருமத்தை பாதுகாக்க வேண்டும்,உடலை குளிர்ச்சியாக வைத்துகொள்ள வேண்டும் என்று கொளுத்தும் வெயில் தொடங்குவதற்கு முன்னரே வெயிலில் இருந்து தம்மை பாதுகாத்துகொள்ள பிளான் செய்து வைத்துள்ளனர்.இங்கே, அனைவரும் சொகுசு வாழ்க்கைக்கு பழகிவிட்டனர்.ஆடம்பரமாக இருந்த ஏ.சி தற்போது அத்தியாவசியமாக மாறிவிட்டது. எங்கே சென்றாலும் ஏ.சி தான் என்ற நிலைமையில் உள்ளனர்.முழு நேரமும் ஏ.சி யில் இருப்பதால் சூரிய ஒளி உடம்பில் படாததால் பல பிரச்சனைகள் உடலில் ஏற்பட தொடங்கிவிடுகிறது.பின்பு அனைவரும் படையடைத்து மருத்துவமனைக்கு செல்வதில் என்ன பயன். வெயிலிலிருந்து கிடைக்கும் நன்மைகளை அனைவரும் அறிந்து கொண்டாலே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்பில்லை.

வெயில் ஒன்றும் கொடியதல்ல,அதில் நமது உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்து உள்ளது.இந்த வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் பெரும்பாலும் சூரிய ஒளியில் இருந்து விலகி இருந்தவர்களாக இருப்பார்கள்.அதற்காக உச்சி வெயில் உடம்பில் படுவது நல்லதல்ல. காலை,மாலை ஆகிய இரு நேரங்களில் நம்மீது படும் சூரிய ஒளி நம் உடம்பிற்கு தேவையான வைட்டமின் டி சத்தினை அளிக்கிறது.

நம் உடம்பில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் எலும்பு,தசை சம்மந்தமான பிரச்சனைகள் வர தொடங்கிவிடும்.எனவே வெயில் உங்கள் உடம்பிற்கு தேவை படாத ஒன்று என நினைத்து கை,கால்களை எல்லாம் மூடிக்கொண்டு செல்லவேண்டாம்.

ஆரோக்கியமாக வெயில் காலத்தை கையாள்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்:

1.முதலில் உடலுக்கு தேவையான நீரினை பருக வேண்டும்.சிலர் வேலையின் மீது உள்ள ஈடுபாட்டில் தண்ணீர் குடிப்பதையே மறந்துவிடுகின்றனர்.சராசரி நாளில் தண்ணீர் குடிப்பதை விட வெயில் காலத்தில் சற்று அதிகமாக குடித்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது.

2.அதோடு குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட வேண்டும்.தர்பூசணி,வெள்ளரிக்காய் போன்ற பழ வகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.உடலை பாதுக்காப்பதோடு சிறிது சருமம் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

3.வெயிலில் செல்வதற்கு முன் சருமத்தை பாதுகாப்பதற்கு சன் ஸ்கீரீனை முகத்தில் தடவிக்கொண்டு சென்றால் உங்கள் சருமத்தின் நிறம் மாறாமல் இருக்கும்.

4.பின்பு வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை பயன்படுத்தி முகத்தினை சுத்தம் செய்ய வேண்டும்.

5.வெயில் அதிகமாக இருப்பதனால் முகத்தினை அடிக்கடியும் கழுவக்கூடாது அது முகத்தில் உள்ள ஈரப்பதத்தை நீக்கிவிடும்.எனவே ஒரு நாளைக்கு முகத்தினை இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே கழுவ வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version