வேதாரண்யத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரம்

வேதாரண்யத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ள நிலையில், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தூத்துக்குடி அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் இரண்டாமிடம் வகிக்கிறது. 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், இதில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் டன் வரை உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு உற்பத்தி செய்வதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உப்பிற்கு நல்ல விலை கிடைப்பதாகவும் ஒரு டன் 400 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது ஒரு டன் 500 முதல் 700 ரூபாய் வரை விற்பனையாவதாகவும், தளம் வைத்து வாரும் உப்பு ஒரு டன் ஆயிரத்து 200 ரூபாய் வரை விற்பனையாவதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version