புதுக்கோட்டை வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்

புதுக்கோட்டை வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக வங்கி ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் 13 புள்ளி ஏழு 5 கிலோ தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையிலான தனிப்படை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக கொலை செய்யப்பட்ட வங்கி உதவியாளர் மாரிமுத்துவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வங்கியில் கொள்ளை சம்பவத்தின் போது பணியிலிருந்த வங்கி மேலாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் வழக்கில் புதிய கோணத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version