ஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை இங்கிலாந்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. 25 மில்லியன் யூரோ செலவில் புனரமைக்கப்பட்ட ஆகாய கப்பலை இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை தயாரித்துள்ளது. 92 மீட்டர் உயரமும், 44 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஆகாய கப்பல், கடந்த 2017-ம் ஆண்டு பரிசோதிக்கப்பட்டபோது விபத்தில் சிக்கியது. இதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். அதன் பின்னர் கிடப்பில் போடப்பட்ட இத்திட்டம் மீண்டும் புனரமைக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஏர்லேண்டர் ஆகாய கப்பல் இங்கிலாந்தில் வெற்றிகரமாக சோதனை
