வீடுகளுக்கு பயன்படுத்தும் கியாஸ் விலை அதிகரிப்பு

வீடுகள் மற்றும் ஹோட்டல்களுக்கு பயன்படுத்தும் கியாஸ் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல்-டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்படுவது போல சமையல் கியாஸ் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த மாதம் முதல் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை, 2 ரூபாய் 94 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் மானியத்தை கழித்து 502 ரூபாய் 40 காசுகளாக இருந்த கியாஸ் விலை, 505 ரூபாய் 34 காசுகளாக ஆக உயர்ந்துள்ளது.

அதே போல, மானியம் அல்லாத சமையல் கியாஸ் விலை, சிலிண்டருக்கு 60 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரியின் தாக்கமே இதற்கு காரணம் என்று இந்திய எண்ணெய் கழகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version