ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் -உச்சநீதிமன்றம்

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோருடன் சமூக செயற்பாட்டாளர் பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கும் இணைக்கப்பட்டு உச்சநீதிமன்றம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்த விவகாரம், நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்டது, எனக் கூறி இது குறித்த வழக்கை எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் புறக்கணித்து. இதனையடுத்து, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Exit mobile version