ஸ்ரீமுஷ்ணம் அருகே போலி பட்டா வழங்கிய துணை வட்டாச்சியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய ராமமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் அரசு ஆவணங்களை மறைத்து வைத்தல் போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு பட்டா மாறுதல் செய்தது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் காவல் துறையினருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.