ஆசிய அளவிலான கராத்தே போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர்கள் சாதனை

ஆசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆசிய அளவிலான கராத்தே போட்டிகள் கடந்த 23ஆம் தேதி மியான்மரில் நடைபெற்றது. இதில் 14 நாடுகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவின் சார்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பூந்தழிர் என்ற மாணவியும் தருண் என்ற மாணவரும் சேலத்தை சேர்ந்த சஞ்சய் என்ற மாணவரும் கலந்து கொண்டனர். பூந்தழிர் மற்றும் சஞ்சய் ஆகியோர் முதல் இடத்தையும், மாணவன் தருண் மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தினர். இதன் மூலம் ஜெர்மணியில் நடைபெறும் சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் மூவரும் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் சொந்த ஊர் திரும்பிய பூந்தழிர் மற்றும் தருண் ஆகியோருக்கு குடும்பத்தினர் உள்பட பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version