தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் தற்கொலை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனியார் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை, வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கேரள மாநிலத்தை சேர்ந்த சைஜூ, என்ற மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, உறவினர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, உரிய விசாரணை நடத்தப்படும் என காவல்துறை அளித்த உறுதியை அடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

Exit mobile version