சமுதாய பணிகளில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், பள்ளியில் மாணவன் காவல்படை திட்டத்தை, நகர காவல் ஆய்வாளர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூரில் அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவன் காவல்படை திட்ட துவக்க விழா நடந்தது. சமுதாய பணிகளில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்த இந்நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த திட்டத்தில் சேரும் இளம் மாணவர்கள், பள்ளி அருகே போக்குவரத்தை சரி செய்வது, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தினார். இதில், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.