மாதவரம் அருகே பெண்ணை தாக்கிய கல்லூரி மாணவர் கைது“`

சென்னை மாதவரம் அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் பிரபு. கல்லூரி மாணவரான இவர், பெண் ஒருவரை தாக்கியதாக கூறி போலீசார் கைது செய்துள்ளனர்.

அனுராதா என்பவர் கொடுத்த புகாரில், ஆசைக்கு இனங்க மறுத்ததால் பிரபு தன்னை கத்தியால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் பிரபுவை அழைத்து விசாரணை நடத்தியதில், தனது தாயாரின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு சிகிச்சைக்காக தனது மகளின் சிகிச்சைக்காக வந்திருந்த அனுராதாவுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பிரபு பணம் கொடுத்துள்ளதாக கூறிய அவர், மேற்கொண்டு தன்னை பணம் கேட்டு தொல்லை செய்ததால், ஆத்திரமடைந்து அனுராதாவை கத்தியால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version