இங்கிலாந்தில் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நைட் ஹூட் விருது இந்தாண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஜெஃப்ரி பாய்காட் மற்றும் ஆண்ட்ரூ ஸ்ட்ரஸ் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. 78 வயதான பாய்காட் 1964 முதல் 1982 வரையிலான காலகட்டத்தில், இங்கிலாந்து அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காகவும், அதேபோல், 42 வயதான முன்னாள் கேப்டனான ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், 2 ஆஷஸ் தொடர்களை வென்று கொடுத்ததன் மூலம் சிறப்பான பங்களிப்பு அளித்ததற்காகவும் விருது வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இவ்விருதினை ராணி எலிசபெத் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெஃப்ரி பாய்காட், ஆண்ட்ரூ ஸ்ட்ரஸ் ஆகியோருக்கு நைட் ஹூட் விருது
