ஸ்டெர்லைட் வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று நடைபெறவுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும், சூழல் மாசுபாடு விதிகளை ஆலை கடுமையாக மீறியிருப்பது குறித்தும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இதில், போதுமான ஆதாரங்களை மாசுக் கட்டுபாட்டு வாரியமும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற மனுதாரர்களும் அளிக்கவில்லை என கூறி கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.இதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சனைக்குத் தீர்வு காண, நம்பகமான வழிமுறைகளை காணும் வகையிலும், அனைத்துத் தரப்பினரின் நியாயங்களை ஆராயும் வகையிலும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

 

Exit mobile version