ஸ்டெம்செல் மூலம் சேதமடைந்த திசுக்களைச் சரி செய்யலாம் – சீன விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு

ஸ்டெம் செல் எனப்படும் தொப்புள்கொடி மூலம், சேதமடைந்த திசுக்களை சரி செய்ய முடியும் என்பதை சீன விஞ்ஞானிகள், உலகிலேயே முதன்முறையாக நிரூபித்துள்ளனர்.

குழந்தை பிறந்தவுடன், தொப்புள் கொடியில் உள்ள ரத்தத்தை சேகரித்து வைப்பதன்மூலம், பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரத்த அணுக்கள் பலவற்றில் ஹெமாட்டோ பயாட்டிக் ஸ்டெம் செல்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் செயல்பாடுகளை முழுவதுமாக, குறிப்பிட்ட உறுப்பு அமைப்பிற்குள் செலுத்துவதற்கு, ஒருவகை செல்களை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் மூலம், சர்க்கரை நோய், புற்றுநோய், ரத்த சம்பந்தமான நோய்கள் உள்பட முக்கிய நோய்களைக் குணப்படுத்துவதற்கான ஒரு உறுதியான அணுகுமுறையாக இந்த ஆய்வு இருக்கும் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version