எஸ்.சி.ஓ வெளியிட்ட அதிசயங்கள் பட்டியலில் இடம் பெற்ற படேல் சிலை

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 8 அதிசயங்களின் பட்டியலில், குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை இடம் பிடித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில், நர்மதா நதிக்கரையில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை, உலகின் உயரமான சிலை என்ற பெருமையுடன் எழுந்து நிற்கிறது. 597 அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தளமாகவும் உள்ளது. ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் வரை, பட்டேல் சிலையைப் பார்வையிட வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, 8 அதிசயங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு அதிசயமாக, இந்தியாவின் சர்தார் வல்லபாய் படேல் சிலையும் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தன் ட்வீட்டர் பக்கத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அறிவிப்புக்கு  நன்றி தெரிவித்துள்ளார்.

Exit mobile version