23 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான டி20 போட்டிகள்

திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் பெரம்பலூர் அணியை திருச்சி அணி வீழ்த்தியது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவிலான 23 வயதுக்குட்பட்டோருக்கான டி20 கிரிக்கெட் போட்டி திருச்சியில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டியில் திருச்சி மற்றும் பெரம்பலூர் அணிகள் மோதின. முதலில் ஆடிய திருச்சி அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பெரம்பலூர் அணி திருச்சி அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

Exit mobile version