செவ்வாய் மற்றும் நிலவுச் சுற்றுலாவுக்கான ஸ்டார்ஷிப் விண்கலத்தின் மாதிரியை, ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ. எலன் மஸ்க் அறிமுகப்படுத்தினார்.
நிலவு, செவ்வாய் மற்றும் அதையும் தாண்டி சனி கிரகம் வரை கூட செல்லக் கூடிய வகையிலான விண்கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்து வருகிறது. இந்த விண்கலத்திற்கு ஸ்டார்ஷிப் எம்.கே.1 எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலம் கேமரன் கவுண்ட்டி என்ற இடத்தில் விண்கலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க், இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் ஸ்டார்ஷிப்பின் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும், அப்போது 20 கிலோ மீட்டர் உயரம் வரை பறந்து மீண்டும் பாதுகாப்பாக தரை இறங்கும் செயல் முறை குறித்து சோதனை செய்து பார்க்கப்படும் எனக் கூறினார்.