பாசிச பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை இந்த வெற்றி பலப்படுத்தும் – ஸ்டாலின்

 

பா.ஜ.க.வுக்கு எதிரான வலுவான கூட்டணியை இந்த வெற்றி பலப்படுத்தும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

5 மாநில தேர்தலில், பா.ஜ.க. பெரும் பின்னடைவு சந்தித்துள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், சாதனை நிகழ்த்திய காங்கிரசுக்கும், ராகுல் காந்திக்கும், தனது பாராட்டுகள் என குறிப்பிட்டுள்ளார். பாசிச பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்தை இந்த வெற்றி பலப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதே போன்று, 5 மாநில தேர்தல் குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் என்றும் இது மக்கள் தீர்ப்பு எனவும் கூறியுள்ளார்.

Exit mobile version