சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் பதிலளிக்க தயாரா என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை செல்வபுரம் பகுதியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது, அதிமுக கூட்டணி தொண்டர்கள் தேனீயை விட சுறுசுறுப்பாக இயங்கி, வேட்பாளர் மகேந்திரனை வெற்றி பெற செய்து, திமுகவை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என கூறி வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஏற்கனவே பொள்ளாச்சி தொகுதிக்காக மகேந்திரன் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளதாகவும், விட்டுப்போன திட்டங்கள் அனைத்தையும் செய்து முடிப்பார் எனவும் உறுதியளித்தார். நடைபெறும் தேர்தலில், 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, 40 எம்பிக்களும் டெல்லியில் தமிழக பிரச்சனைகளை எடுத்துரைத்து பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என பிரசாரம் செய்தார்.