பொதுத்தேர்வு எழுதப்போகும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுச்செயலாளர் அவர்கள் வாழ்த்து..!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்குகிறது. 9.76 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதுகின்றனர். அதனையொட்டி மாணவர்கள் இந்தப் பொதுத்தேர்வினை அச்சமில்லால் அணுகவும், நல்லபடியாக எழுதவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தனது வாழ்த்தினை தெரிவித்தார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

”தமிழ்நாட்டில் பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் அன்பிற்கினிய மாணவ,மாணவிகள், நம்பிக்கையுடன் சிறந்த முறையில், அச்சமில்லாமல் தேர்வை எதிர் கொண்டு, அனைவரும் வெற்றி பெற்று, எதிர்காலம் சிறக்க உளமாற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”

Exit mobile version