அரசு தரப்பு வழக்கறிஞரிடம் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, நீதிபதி கேள்வி எழுப்பினார். விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் தாக்கல் செய்து, மாணவி பயன்படுத்திய செல்ஃபோனை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தடயவியல் துறையின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், மற்ற விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார். தடயவியல் துறை அறிக்கை கிடைத்தவுடன், ஒரு மாதத்தில் விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார். இதனையடுத்து, ஜிப்மர் குழு பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கக் கோரி, விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி மனுதாரர் ராமலிங்கத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.