இலங்கையில் போருக்கு பின்னர் நடைபெற்ற குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்புவில் உள்ள இந்து கல்லூரியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ கணேசன் உபகரணங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் போருக்குப் பின்னர் பலர் கடத்தி படுகொலை செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து அரசு தரப்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
விசாரணையின் போது மதத் தலைவர்கள் அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். நியாமான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என மனோ கணேசன் கேட்டுக்கொண்டார்.