இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை – ராஜபக்சே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து, இலங்கை உயர் நீதிமன்றத்தில் ராஜபக்சே இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே அறிவிக்கப்பட்டதில் இருந்து அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இதனிடையே, பிரதமராக ராஜபக்சே தொடரக்கூடாது என, ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜபக்சே பிரதமராக செயல்படவும், அமைச்சரவை கூட்டம் நடத்தவும் இடைக்கால தடை விதித்தது. ராஜபக்சேவும், அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும், டிசம்பர் 12-ம் தேதி ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்ததை ஏற்கமாட்டோம் என்றும், இதனை எதிர்த்து இலங்கை உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் ராஜபக்சே கூறியுள்ளார்.

 

Exit mobile version