வாழ்வின் கடைசி 1 மணி நேரத்தை ஸ்ரீதேவியின் கல்லறையில் செலவிட வேண்டும் : பிரபல இயக்குனர்

பிரபல தெலுங்கு இயக்குனர் ஸ்ரீதேவியின் கல்லறைக்கு அருகில் தன்னை புதைக்குமாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

80 களில் தமிழ் திரையுலகை கலக்கியவர் ஸ்ரீதேவி.அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்திற்கு அளவே இல்லை.இந்திய திரையுலகை கடந்த ஆண்டு கலங்க வைத்த ஒரு சம்பவம் என்றால் அது ஸ்ரீதேவியின் எதிர்பாராத மரணம் தான்.சமீபத்தில் ஸ்ரீதேவிக்கு  சிங்கப்பூரில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற மேடம் டுசார்ட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநரான ராம் கோபால் வர்மா ’தான் இறந்த பிறகு ஸ்ரீதேவியின் கல்லறை அருகே தன்னை புதைக்கவேண்டும்’ என்று ரசிகர்களிடம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.ராம் கோபால் வர்மா ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய பதிவினால் அனைவராலும் அறியப்பட்டவர்.

இந்நிலையில் தனது வாழ்க்கையின் கடைசி ஒரு மணி நேரத்தை ஸ்ரீதேவியின் கல்லறையில் செலவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இவரின் இந்த பேச்சு திரைத்துறையினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version