அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு விழிப்புணர்வு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வினய், கொரோனா வைரஸ் பற்றி அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளவேண்டுமென பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
கொரோனாவை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லையென மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.