இரண்டாவது நாளாக சிறப்பு பேருந்துகள் இன்றும் இயக்கம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று இரண்டாவது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து நேற்று 3,529 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாதவரம் புதிய பேருந்துநிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து இந்த பேருந்துகள் புறப்பட்டு சென்றன.

இன்று 3 ஆயிரத்து 741 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாளை 3 ஆயிரத்து 411 பேருந்துகளும், 14ஆம் தேதி 3 ஆயிரத்து 582 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் சிரமமின்றி தங்கள் ஊருக்கு சென்றனர். இதனிடையே வெளியூர் பயணிகள் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு எளிதாக செல்ல 250 இணைப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.மேலும் பயணிகள் தங்களது சந்தேகம் குறித்து கட்டணமில்லா தொலைபேசி சேவை எண் 18004256151 என்ற எண்ணை தொடர்பு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version