ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் FALCON 9 ராக்கெட் மூலம் இஸ்ரேல் நாட்டின் AMOS-17 என்ற தொலைத்தொடர்பு செயற்கைகோள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக FALCON-9 ராக்கெட்டின் பூஸ்டர்கள் கடந்த ஜூலை-31 ஆம் தேதி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஆகஸ்ட் 4 ல் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில் FALCON -9 ராக்கெட்டில் ஏற்பட்ட சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வரும் 6 ஆம் தேதி செயற்கை கோளை ஏவ ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கத்தார் நாட்டின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இருந்தாலும் , AMOS-17 ஐ வெற்றிகரமாக செலுத்துவதன் மூலம் FALCON-9 ராக்கெட்டை கொண்டு முதல்முறையாக செயற்கைகோளை புவி வட்ட பாதையில் நிலைநிறுத்திய பெருமையை அந்நிறுவனம் பெறும் என்பது குறிப்பிடதக்கது.