"சூரரைப் போற்று" படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியீடு

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி, இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது. படத்தில் கதாநாயகனுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். மேலும், ஜாக்கி ஷெராப், கருணாஸ், மோகன் பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இதற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. தற்போது செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், ‘சூரரைப் போற்று’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Exit mobile version